புலோலி தெற்கை பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் சிதம்பரா கல்லூரி முன்னாள் ஆசிரியரும், பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், Brunei இல் சேவையாற்றியவருமான திரு.விநாயகர் நடராஜா (KVN) அவர்கள் 08.06.2024, சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கோணப்பர் விநாயகர், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் வைரவிப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி (கிளி) இன் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 09.06.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை 10.06.2024, திங்கட்கிழமை மாலை 03.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளகின்றோம்
தகவல்
N. சரஸ்வதி (மனைவி) - No.06, H Block, Bambalapitiya Flats, Colombo 04