நீர்பாசன ஓய்வூதிய தொழில்நுட்ப ௮திகாரி, முன்னாள் ஆங்கில இலக்கிய ஆசான்
யாழ். புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கதிர்காமநாதன் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி (இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தர், உதவிரசாங்க பணிமனை பருத்துறை) அவர்களின் அன்புக்கணவரும்,
சரஸ்வதி, கமலாவதி, சிதம்பரநாதன், ராமநாதன், பத்மாவதி, திலகவதி, புனிதவதி, புஸ்பவதி, சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, சகுந்தலை, சிவபாக்கியம், கணேந்திரன், கனகலிங்கம், கணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி - மனைவி - +94768055322