புற்றளை, புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிருஷ்ணகுமார் அவர்கள் 10.12.2024, செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
பிரகலாதன், அனுஷா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயச்சந்திரிகா, பிரதீஸ்வரன் , லவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரஜனி, தனுஷ் , ஷாபிகா , தனுஷ்கா, கெளதம் , கௌரவ் , நந்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மஹிந்த மலர்ச்சாலை கல்கிசையில் 12.12.2024, வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மதியம் 2.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 2.00 மணியளவில் சமயக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 4.00
மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகட்கு:
மனைவி விமலாதேவி - +94773990723
பிள்ளைகள்
பிரகலாதன்- +94773138766
அனுஷா- +94771502221
தர்ஷன் - +918527770155