ஓய்வுபெற்ற பொறியியலாளர்
தும்பளையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி சந்திரநாயகம் 09.02.2025 , ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி , மங்கையர்க்கரசி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்
தனலக்சுமியின் அன்புக்கணவரும்
சுபாங்கினி, பிரவீணா,பிரதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தில்குமார், கேதாரசர்மா, அனிர்பன் ஆகியோரின் மாமனாரும்,
மதுமிதன், சிவகரிஷ், அரன், சீரோன், அஹான், ஆவ்யா, ஆகியோரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்ற சேதுநாயகம், செல்வநாயகி , வல்லிபுரம் மற்றும் ஜெயராஜா , நவமணிதேவி , சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரன், சிவகுமாரன் , பஞ்சலிங்கம், ராமகிருஷ்ணன் , விஜயலக்சுமி , கந்தரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் (Jeyaratne Parlour) 12.03.25, புதன்கிழமை காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை வைக்கப்பட்டு , 13.03.25 , வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று 11.00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்
தகவல்
குடும்பத்தினர்