புலோலி தெற்கு, புலோலி - கொழும்பு
2 January 1945 – 12 April 2026
புலோலி தெற்கு புலோலியை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி மங்கையர்க்கரசி விக்னேஸ்வரமூர்த்தி அவர்கள் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா - பாறுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரமூர்த்தி (இளைப்பாறிய பிரதம தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற பத்மலோஷினி, இன்பநாதன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
பூங்கோதை, யோகரஞ்சன் , டினோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, கீதாஞ்சலி, சோம்ஈஸ்வர், இனேஷ் ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
தனலக்ஷ்மி , விமலாதேவி, கமலாதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பதுமநாயகம், புவனேஸ்வரி, பகவதி, அம்பிகைபாகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15.04.2026, புதன்கிழமை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் ( 591, காலி வீதி ) காலை 8.30 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பித்து, 1.00 மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
பாலன் (மகன்) - +94 776271401
யோகரஞ்சன் (மருமகன்) - +94 716458239
நாதன் (மகன்) - +1 5105654296
Share a memory, a prayer, or a few words of comfort for the family.